வீரராகவனும் விஜயராகவனும்
இந்த ஆண்டு (2014) ஆடி மாதம் பூர நக்ஷத்திரத்தன்று எனது தந்தையாரின் நூறாவது ஆண்டு துவக்கம்.
முதலில் எங்கள் குடும்பத்தைப் பற்றி :-
முதலில் எங்கள் குடும்பத்தைப் பற்றி :-
எனது தந்தையார் பெயர் விஜயராகவன் என்கிற மாப்பிள்ளை ஐயங்கார் என்கிற பட்டண்ணா . எனது தாயார் பெயர் ஷெண்பகவல்லி. என் கூடப் பிறந்தவர்கள் ஒரு மூத்த சகோதரி மற்றும் நான்கு சகோதரர்கள். அவர்களில் இரண்டு சகோதரர்கள் எனக்கு மூத்தவர்கள், மற்ற இரண்டு பேர் இளையவர்கள். இவர்களில் இரண்டு மூத்த சகோதரர்களுமே இப் பூவலுகில் இப்பொழுது இல்லை.
எனது தந்தையாரைப் பற்றி சொல்வதற்கே இப்பொழுது எழுதுகிறேன்.
அவர் சென்னை பூக்கடை அருகில் உள்ள ஸ்ரீ சென்ன

கேஸவப் பெருமாள் கோயிலில், அலுவலகத்தில் கணக்காளராகவும்,
கோயில் ஸன்னதியில் புருஷாகாரி கைங்கர்யமும் செய்து வந்தார். கோயிலில் அவரின் திருநாமம் மாப்பிள்ளை ஐயங்கார். அலுவலகத்தில் மேலே சொன்னபடி விஜயராகவன்.
அவருக்கு முன் எனது தாயாரின் தகப்பனார் அக்கோயிலில் கைங்கர்யம் செய்து வந்து பிறகு என் தந்தையாரிடம் அக் கைங்கர்யம் மாற்றப்பட்டது. எனது தாய் வழி பாட்டனாருக்கு மாப்பிள்ளையாகையால் அக்கோயில் கைங்கர்யபரர்கள் மற்றும் நண்பர்கள் எனது தகப்பனாரை மாப்பிள்ளை ஐயங்கார் என்று அழைக்க சென்னையில் அப்பெயரே அவருக்கு நிரந்தரமாகியது. இன்றும் அக்கோயிலை சேர்ந்தவர்கள் எங்களை அழைக்கும் போது மாப்பிள்ளை ஐயங்கார் மகன்கள் என்றுதான் கூப்பிடுகிறார்கள்.
எங்கள் சொந்த ஊராகிய மெய்யூரில் ( செங்கல்பட்டு அடுத்த பாலாற்றங்கரை ஒட்டிய ஊர் ) அவருக்கு " பட்டண்ணா " என்று பெயர். எங்கள் தகப்பனார் சென்னைப்பட்டணத்தில் வசித்ததால், எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் தங்கள் அண்ணனாகவே எங்கள் தகப்பனாரைக் கருதியதாலும், பட்டணத்தில் வசித்ததாலும்,
பட்டணத்து அண்ணன் என்கிற வகையில் பட்டண்ணா என்று அழைக்கலானார்கள்.
அவர் பிறந்த பொழுது அவர் அனுபவித்த துயரங்கள் ஏராளம். ஆம். அவர் பிறந்த பதினோராவது நாள் - புண்ணியாகவசனத்தன்றே அவர் தகப்பனார் பரமபதித்துவிட்டார். அவர் வசித்து வந்த அத்தியூர் என்னும் கிராமத்திலிருந்து அருகிலே உள்ள மெய்யூருக்கு, புண்ணியாகவசனத்தன்று காலை வயல்வெளி வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பொழுது, ஒரு நல்ல பாம்பு கடித்து வயல்வெளியிலேயே மடிந்துவிட்டார். அவர் தம் உறவினர்கள் எல்லோரும் வில் வண்டியில் மெய்யூருக்கு வந்துவிட்டனர். மிகவும் விடியற்காலையாதலால் இருள் கவ்விக்கொண்டிருந்த அவ்வேளையில் அவர் வயற்காட்டில் இப்படி மாண்டுவிட்டது ஒருவருக்கும் தெரியாது. நேரம் செல்லச் செல்ல அவர் ஊர் வந்து சேரவில்லை என்று பலரும் திசைக்கொருவராக அவரைத் தேடி, கடைசியில் அவர்தம் உயிறற்ற உடம்பை கண்டுபிடித்தனர். . 22 வயதில் தந்தை பலியாகிவிட்டார். தாயாரோ 19 வயதில் விதவையாகிவிட்டார். இவரோ அவர் பிறந்து அன்று வெறும் 11 நாட்கள் தான்.இத்தகைய ஒரு மஹா சோகமான துவக்கத்துடன்தான் எனது தகப்பனார் வாழ்க்கை தொடங்கப்பட்டது.
நிற்க, எனது பாட்டனாரின் ஈமக் கிரியைகள் முடிந்த "சுப ஸ்வீகாரம்"
நடந்த அன்று ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வீட்டில் பல பெரியவர்கள் - எனது தகப்பனாரின் தாய் வழி மற்றும் தந்தை வழி பெற்றோர்கள் எல்லோரும் - வீட்டில் நடந்த அந்த துக்க நிகழ்ச்சியை அசை போட்டுக் கொண்டிருந்த பொழுது மிகவும் வயதான ஒரு தொண்டு கிழவர் நன்றாக வடகலை திருமண் நெற்றி நிறைய சாற்றிக் கொண்டு ஊருக்கு வந்து எங்கள் அகத்தில் முன் நின்று கொண்டு எங்கள் பாட்டியின் பெயரை சொல்லி அவரை பார்க்கவேண்டும் என்று வீட்டிலிருந்த பெரியவர்களிடம் கூறினார். அவர்கள் அப்பெரியவரை யார் என்று கேட்க அவரோ தாம் திருவள்ளூரில் இருந்து வருவதாகவும் தன்னுடைய பெயர் வீரராகவன் என்றும் கூறினார்.
அக்காலங்களில் எங்கள் ஊருக்குள் செல்வதற்கு பேருந்து வசதிகள் கிடையாது. பாலாற்றங்கரையில் இறங்கி சுமார் மூன்று கிலோ மீட்டர்கள் நடந்தோ அல்லது மாட்டு வண்டியிலோதான் வரவேண்டும். அவர் மாட்டு வண்டியில் வரவில்லை. நடந்துதான் வந்திருக்க வேண்டும். அவரின் வயோதிக நிலையைக் கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது அவரால் நிச்சயமாக நடந்து வந்திருக்க முடியாது. எனவே ஊர் பெரியவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். .
அந்தப் பெரியவரின் முன் எங்கள் பாட்டி - எனது தந்தையாரின் தாய் வந்து நின்றார். அப்பொழுது அப் பெரியவர் எங்கள் பாட்டியிடம் அவருக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி ஆறுதல் சொல்லி, தான் கொண்டு வந்திருந்த ஒரு "குந்துமணியை" அவரிடம் கொடுத்து, அதனை பத்திரமாக வைத்திருக்கும்படியும், அவர் மகன் ( எங்கள் தந்தை ) மூலம் குடும்பம் ஆலமரமாக தழைத்து வளரும் என்றும்,
இடையில் ஏற்பட்ட துயரத்தை மறக்கும் படியும் கூறி அவரை வாழ்த்தினார். பிறகு எங்கள் கொள்ளு தாத்தா அவரை உணவு அருந்த வருமாறு சொல்லி அழைத்தனர். அவரும் அங்குள்ள கோயிலுக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் பிறகு வரவே இல்லை. எங்கு தேடியும் அவர் காணக்கிடைக்கவில்லை.
எங்கள் ஊர் பெரியவர்கள் பலரும் ஒன்று கூடி சிறிது ஆலோசித்து விட்டு , அங்கு வந்தது நிச்சயமாக திருவள்ளூர் வீரராகவப் பெருமாளாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். பெருமாளே வந்து எங்கள் பாட்டிக்கு ஆறுதல் கூறியதாக எங்கள் பாட்டியிடம் கூறி அவர் மனதைத் தேற்றினர்.எங்கள் பாட்டியும் அப்பெரியவர் கொடுத்த அந்த குந்துமணியை ஒரு சிறிய பையில் வைத்து அந்த பையை ஒரு பெட்டியில் வைத்து அதனை பீரோவில் வைத்து மிக ஜாக்கிரதையாக பாதுகாத்து வந்தார்.
அன்று முதல் எங்கள் குடும்பம் திருவள்ளூர் ஸ்ரீ.வீரராகவனை எங்கள் குடும்பத்து குலதெய்வமாக வரித்துக் கொண்டனர்.

எனது தகப்பனார் காரப்பங்காடு ஸ்ரீ.உ.வே.வெங்கடாச்சாரியர் ஸ்வாமியிடம் நாலாயிர திவ்ய ப்ரபந்த பாசுரங்களை சந்தை மூலமாக கற்றுக் கொண்டார். மேலும் ஸ்ரீ பாஷ்யம் போன்ற பல க்ரந்தங்களையும் கற்றுத் தேரினார். இதன் காரணமாக அவர் காலத்து பல வித்வான்களுடன் அவருக்கு நல்ல பரிச்சயத்துடன் கூடிய நண்பராகவும் விளங்கினார்.
இது இப்படி இருக்க நாட்கள் வாரங்களாகவும் வாரங்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் உருண்டோடின. எனது மூத்த சகோதரரின் திருமணம் (1966 டிசம்பர் மாதம் ) முடிந்து எங்கள் சொந்த ஊரான மெய்யூரில் தலைக் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறகு சென்னை திரும்பி எங்கள் தகப்பனார் அவரின் கோயில் கைங்கர்யத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்.
சென்னை பூக்கடை, சைனா பஜாரில் அமைந்துள்ள தேரடி வீதியில் எங்கள் இல்லத்து கூடத்தில் மூன்று பக்கங்களிலும் மேல் சுவற்றில் பல திவ்ய தேஸ பெருமாள் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். அப்படங்களில் ஒன்றாக ஸ்ரீ.வீரராகவனின் படமும் மாட்டப் பட்டிருக்கும். இதனை நான் சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. அந்த வருடம் ( 1966 )கார்த்திகை மாதம் அத்யயன உற்சவம் தொடக்க நாளன்று இரவு சுமார் 10.00 மணியளவில் எங்கள் தகப்பனார் கோவிலிலிருந்து திரும்பிய பிறகு களைப்பு தீர படுத்துக் கொண்டார். அப்பொழுது அவர் கண்களுக்கு ஸ்ரீ.வீரராகவன் படத்திலிருந்து ஒரு ஜோதி புறப்பட்டு செல்வது போல் தெரிந்தது. இல்லத்தில் இருந்த எங்கள் எல்லோரிடமும் அவர் கண்களுக்கு தெரிந்த அந்த ஜோதியைப் பற்றி கூறி எங்களுக்கும் தெரிகின்றதா என்று வினவினார். ஆனால் மற்ற எங்கள் அனைவர் கண்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. நாங்கள், எங்கள் அனைவருக்கும் ஒன்றும் தெரியவில்லையே , நீங்கள் ஏதாவது கனவு காண்கிறீர்களா என்று அவரிடம் கேட்டோம். அப்பொழுது அவர் என்ன சொல்கிறீர்கள், அதோ இன்னும் அந்த ஜோதி தெரிந்து கொண்டுதானே இருக்கிறது என்று கூறினார். சிறிது நேர சலசலப்பிற்கு பிறகு எல்லோரும் உறங்கச் சென்று விட்டோம். இதனை பிறகு ஒரு பெரிய விஷயமாகவும் நினைக்கவில்லை.
இப்படியாக இன்னும் பத்து நாட்கள் சென்று விட்டன. பகல் பத்து உற்சவம் முடிந்து இராப்பத்து உற்சவம் தொடக்க நாளான வைகுண்ட ஏகாதசி நாள். விடியற்காலையிலேயே கோயிலுக்கு சென்று விட்டார். அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் ஸ்ரீ.கேசவப் பெருமாள் கருட வாஹனத்திலும், ஸ்ரீ நம்மாழ்வார் யானை வாஹனத்திலும் புறப்பாடு கண்டருளினர். புருஷாகாரியான எங்கள் தகப்பனாருக்கு பெருமாள், ஆழ்வார் மாலை சாற்றி மரியாதை செய்விக்கப்பட்டது. பெருமாளும் ஆழ்வாரும் வீதி புறப்பாடு கண்டருள, எங்கள் தகப்பனார் இல்லம் திரும்பினார்.
இல்லம் திரும்பிய அவர் புழக்கடைக்கு செல்ல எங்கள் தாயாரிடம் ராந்தல் விளக்கு கொண்டுவரச் சொன்னார். நாங்கள் வசித்த தேரடித் தெருவானது பொது வீதியல்ல. அந்த வீதி முழுவதும் கோயிலுக்கு சொந்தமானது. எனவே அந்த வீதியில் உள்ள பத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு கிடையாது.எனவே இரவு நேரங்களில் ராந்தல் விளக்குதான் உபயோகப்படுத்தப்படும். விளக்கு கொண்டு வருவதற்குள் எங்கள் மூத்த சகோதரியிடம் தீர்த்தம் கொண்டுவரச் சொன்னார். அவரிடம் ஏனோ தனது கைகளைத் தூக்க முடியவில்லை என்று சொல்லி தனது வாயில் அவரையே தீர்த்தம் கொடுக்கும்படி கூறியதுடன் எங்கள் தாயாரை தன்னை பிடித்துக் கொள்ளும் படியும் கூறினார். எங்கள் தாயார் பிடித்துக் கொண்டிருக்க சகோதரி தீர்த்தம் அளித்துக் கொண்டிருக்க அப்படியே சரிந்து விட்டார். எங்கள் தாயார் சற்று பதட்டத்துடன் பக்கத்து குடியிருப்பில் உள்ள கோயில் மடப்பள்ளியில் தளிகைகள் செய்து கொண்டிருப்பவரான ஸ்ரீ.சேஷாத்திரி ஐயங்காரை ( இவரும் இப்பொழுது இல்லை )அழைத்து என்ன வென்று பார்க்கச் சொன்னார். அவர் எங்கள் தகப்பனாரின் மார்பை தொட்டுப் பார்த்துவிட்டு எங்களிடம் எங்கள் தகப்பனார் பரமபதித்துவிட்டார் என்றும், அன்று வைகுண்ட ஏகாதசி ஆதலால் அவர் பெரும் புண்ணியம் செய்திருக்கிறார் என்றும் கூறி எதற்கும் மருத்துவரை அழைக்கலாம் என்று சொல்லி மருத்துவரையும் வரவழைத்தார். மருத்துவரும் வந்து பார்த்துவிட்டு அவர் பரமபதித்துவிட்டதை உறுதி செய்தார். என்ன செய்வது ? எங்கள் மூத்த சகோதரரைத் தவிர மற்ற அனைவரும் கல்லூரி, பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த வயது.
பொதுவாக எங்கள் தகப்பனார் கோயில் உற்சவ காலங்களில் அவரது தாயாரை மெய்யூரிலிருந்து வரவழைப்பது வழக்கம். ஆனால் அந்த ஆண்டு மட்டும் ஏனோ அவரை ஊரிலேயே இருக்கும்படி கூறிவிட்டார். அவரை அழைத்து வர வேண்டும். அதே நேரத்தில் அவர் உயிருடன் இல்லை என்ற தகவலும் அவரிடம் சொல்லக் கூடாது. எங்கள் சித்தப்பா ( தகப்பானாரின் சித்தி மகன் ) மெய்யூருக்கு சென்று அவரை பக்குவமாக அழைத்து வந்தார். சென்னை வந்த பிறகே அவருக்கு அவர் மகன் பரமபதித்த விவரம் தெரியவந்தது. சொந்த கிராமத்தின் மீது அதீத ப்ரியம் உள்ளவர் என்பதனால் அவருடைய அந்திம காரியங்கள் எல்லாம் ஊரிலேயே நடைபெற்றது.
எங்கள் பாட்டியின் நினைவுக்கு அந்த குந்துமணி விவகாரம் ஞாபத்துக்கு வர, அவரிடம் அவர் கணவர் மறைந்த பதிமூன்றாம் நாள் ஒரு முதியவரால் கொடுக்கப்பட்டு, பத்திரப் படுத்தி வைத்திருந்த அந்த குந்து மணியை பார்க்க விரும்பி அந்த பெட்டியை எடுத்தார். என்ன ஆச்சரியம் ? அதனை திறந்து பார்த்த பொழுது அப்பெட்டியினுள் அந்த குந்துமணி இல்லை. வெகு ஜாக்கிரதையாக பாதுகாக்கப்பட்ட அந்த குந்துமணியும் எங்கள் தகப்பனார் மறைவுக்குப் பிறகு காணாமல் போய்விட்டது எங்களுக்கு எல்லாம் இன்று வரையில் ஆச்சரியமான விஷயம்தான்.
ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ஒரு வடகலை வைதீக வயோதிகராக வந்து எங்கள் பாட்டியிடம் கொடுத்த அந்த பொருள் எங்கள் தகப்பனார் மறைந்துவிட்டபொழுது காணாமல் போனதும் அந்த பெருமாளின் செய்கைதான் என்றுதான் எண்ணத் தோன்றியது.
இதோ இப்பொழுது ஸ்ரீ.வீரராகவப் பெருமாள் கடாக்ஷித்தபடி எங்கள் குடும்பம் ஆலமரமாக ( ஒரு மகள், ஐந்து மகன், ஒவ்வொருவருக்கும் இரண்டு குழந்தைகள் என்று ) தழைத்து பெருகி வளர்ந்து கொண்டிருக்கிறது.
எங்கள் குல தெய்வங்களான ஸ்ரீ வீரராகவப் பெருமாள், சிங்கப் பெருமாள் கோயில் ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் ( எங்கள் மூதாதையர் குலதெய்வம் ), எங்கள் ஊர் பெருமாளான ஸ்ரீ சுந்தரராஜன், எங்களை வளர்த்து ஆளாக்கிய ஸ்ரீ.(சென்னை )கேஸவப் பெருமாள், இன்று எங்களை நல்லபடி வழி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ.நரசிம்ம ஸ்வாமி எங்கள் குடும்பங்களை மேலும் வாழையடி வாழையாக தழைத்தோங்க வைப்பார்கள்.
இந்த ஆண்டு ஆடி மாதம், பூர நக்ஷத்திரத்தன்று எங்கள் தகப்பனார் பிறந்து நூறாவது ஆண்டு துவக்கம். அவரின் நினைவாக இந்தப் பதிவு.

.