Monday, August 6, 2018

நரசிம்மாவதாரமும், ஆழ்வார்கள் பாசுரங்களும்.

எம்பெருமான் ஸ்ரீமந்.நாராயணன் எடுத்த தஸ அவதாரங்களில் , ஸ்ரீ.ராமாரும், ஸ்ரீ.கண்ணபிரானும் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். அதே போல் வேறு சில அவதாரங்களும் ஆண்டுக் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ அல்லது நாள் கணக்கிலோ அவதரித்து வாழ்ந்திருந்தனர். ஆனால் ஸ்ரீமந்.நாராயணன், ஒரு அவதாரத்தில் மட்டுமே சில மணித்துளிகள் இப் பூவுலகிலே இருந்தார். அந்த அவதாரம் தான் ஸ்ரீ.நரசிம்மாவதாரமாகும்.

மிக மிக உக்கிரகமாக அவதரிக்கும் போது காட்சியளித்த எம்பெருமான் ஹிரண்ய வதம் முடிந்த பிறகு, சில கண நேரத்தில் சாந்த ஸ்வரூபியாக மாறினான். ஹிரண்யன் பெற்ற வரத்தினால் அவனை சுலபாக மனிதனாகவோ, மிருகமாகவோ அவனை கருவருக்க இயலாத நிலையில், தன்நிடம் முற்றாக சரணடைந்த ப்ரஹலாதனை காக்க வேண்டி, எம்பெருமான் மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் , இரண்டு உருவங்களையும் தன்னுள் கொண்டு ஸ்ரீ.நரசிம்மனாக அவதரித்து ஹிரண்யனை வதம் செய்து முடித்தார். அற்புதமான இந்த அவதாரத்தினை ஆழ்வார்கள் பல பாசுரங்களில் மங்களா ஸாஸனம் செய்துள்ளனர்.


மேற் கொண்டு எழுதுவதற்கு முன்பு, இப்படி அடியேனை எழுதத் தூண்டியவர், அடியோங்கள் சார்ந்த நாலூரான மெய்யூர், களியப்பேட்டை, அத்தியூர், பெலாப்பூர் ஆகியவற்றில் ஒன்றான அத்தியூர் ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி சௌரிராஜன் ஸ்வாமி அவர்களுக்கு முதற்கண் அடியேனின் வணக்கத்துடன் கூடிய நன்றி.


ஸ்வாமி அவர்கள் சில மாதத்திற்கு முன் , தான் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டிருந்த ஒரு நூலினை அடியேனிடம் கொடுத்து, அதனை கொண்டு,  அடியேனால் இயன்ற அளவு ஸ்ரீ.நரசிம்மாவதாரத்தினை ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை குறிப்பிட்டு அதனை ஸ்ரீவைஷ்ணவ பக்தர்கள் அறியும் வண்ணம் எழுதச் சொன்னார்.


நேரம் இல்லாத காரணத்தினால், அவர் அடியேனிடம் மீண்டும், மீண்டும் நினைவுபடுத்தியும் , செய்ய இயலவில்லை. தற்சமயம் அடியேனுக்கு எம்பெருமான் அதனை பற்றி எழுத போதுமான அவகாசத்தை கொடுத்திருப்பதால் இன்று ( 07.07.2016 ) எழுதத் தொடங்குகிறேன்.



முதலாயிரம் :-


ஸ்ரீ.பெரியாழ்வார் :-

திருப்பல்லாண்டு , ஆறாம் பாசுரம் :-

எந்தை தந்தை தந்தை, தந்தை தம் மூத்தப்பன் * ஏழ் படிகால் தொடங்கி * வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் * திருவோணத் திருவிழவில் *             அந்தியம்போதில் அரியுருவாகி * அரியை அழித்தவனை *
பந்தனை தீரப் பல்லாண்டு *  பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே *


பெரியாழ்வார் திருமொழி:-


முதல் பத்து, இரண்டாம் திருமொழி, ஐந்தாம் பாசுரம் :-

பிறங்கிய பேய்ச்சி * முலை சுவைத்துண்டிட்டு *
உறங்குவான் போலே * கிடந்த இப்பிள்ளை *
மறங்கொள் இரணியன் * மார்பை முன் கீண்டான் *
குறங்குகளை வந்து காணீரே * குவி முலையீர் வந்து காணீரே *


முதல் பத்து, ஐந்தாம் திருமொழி, இரண்டாம் பாசுரம் :-

கோளரியின் உருவம் கொண்டு அவுணனுடலம் *
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய் *
மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி *
மேலை அமரர் பதிமிக்கு வெகுண்டு வர *
காள நன்மேகமவை கல்லொடுகால் பொழியக் *
கருதிவரைக் குடையாக் காலிகள் காப்பவனே *
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை *
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே *


முதல் பத்து, ஆறாம் திருமொழி, ஒன்பதாம் பாசுரம் :-

அளந்திட்ட தூணை * அவன் தட்ட * ஆங்கே  
வளர்ந்திட்டு * வாளுகிர்ச் சிங்க உருவாய் *
உளந்தொட்டிரணியன் * ஒண்மார்வகலம் *
பிளந்திட்ட கைகளால் சப்பாணி *  பேய் முலை உண்டானே சப்பாணி *


இரண்டாம் பத்து, ஏழாம் திருமொழி, ஏழாம் பாசுரம்:-

குடங்கள் எடுத்தேறவிட்டுக்  * கூத்தாட வல்ல எம் கோவே *
மடங்கொள்  மதிமுகத்தாரை *  மால் செய்ய வல்ல என் மைந்தா *
இடந்திட்டு இரணியன் நெஞ்சை * இரு பிளவாக முன் கீண்டாய் *
குடந்தைக் கிடந்த எம் கோவே * குருக்கத்திப் பூச்சூட்ட வாராய் *


மூன்றாம் பத்து, ஆறாம் திருமொழி, ஐந்தாம் பாசுரம் ;-

முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் * மூவுலகில்
மன்னரஞ்சும் * மதுசூதனன் வாயில் குழலின் ஓசை * செவியைப் பற்றி வாங்க *
நன்னரம்புடைய தும்புருவோடு * நாரதனும் தம் தம் வீணை மறந்து * கின்னர மிதுனங்களும் தம் தம் கின்னரம் * தொடுகிலோம் என்றனரே *



நான்காம் பத்து, முதல் திருமொழி, முதல் பாசுரம் :-

கதிராயிரம் இரவி * கலந்தெரித்தால் ஒத்த நீள் முடியன் *
எதிரில் பெருமை இராமனை * இருக்குமிடம் நாடுதிரேல் *
அதிரும் கழல் பொரு தோள் * இரணியன் ஆகம் பிளந்து * அரியாய்
உதிரம் அளைந்த கையோடிருந்தானை * உள்ளவா கண்டாருளர் *


நான்காம் பத்து, நான்காம் திருமொழி,  ஆறாம் பாசுரம் :-

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து * புலன்கள் ஐந்து பொறிகளால் *
ஏதம் ஒன்றுமிலாத * வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் *
நாதனை நரசிங்கனை * நவின்றேத்துவார்கள் உழக்கிய *
பாத தூளி படுதலால் * இவ்வுலகம் பாக்கியம் செய்ததே *


நான்காம் பத்து, நான்காம் திருமொழி,  ஒன்பதாம் பாசுரம் :-

கொம்பினார் பொழில்வாய் * குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர் *
செம்பொனார் மதிள் சூழ் * செழுங்கழனியுடைத் திருக்கோட்டியூர் *
நம்பனை நரசிங்கனை * நவின்றேத்துவார்களைக் கண்டக்கால் *
எம்பிரான் தன் சின்னங்கள் * இவரிவரென்றுஆசைகள் தீர்வனவே *


நான்காம் பத்து, எட்டாம் திருமொழி, எட்டாம் பாசுரம் :-

வல்லெயிற்றுக் கேழலுமாய் *  வாளெயிற்றுச் சீயமுமாய் *
எல்லையில்லாத் தரணியையும் * அவுணனையும் இடந்தானூர் *
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு * எம்பெருமான் குணம் பாடி *
மல்லிக வெண் சங்கூதும் * மதிள் அரங்கம் என்பதுவே *


நான்காம் பத்து, ஒன்பதாம் திருமொழி, எட்டாம் பாசுரம் :-

உரம் பற்றி இரணியனை * உகிர்நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி *
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க * வாயலரத் தெழித்தான் கோயில் *
உரம் பெற்ற மலர்க் கமலம் * உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட *
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் * தாள் சாய்த்துத் தலை வணங்கும் தண்ணரங்கமே *




திருமழிசை ஆழ்வார் :-
:-
திருச்சந்தவிருத்தம் , 62 ஆம் பாசுரம் :-


கரண்ட மாடு பொய்கையுள் * கரும்பனைப் பெரும் பழம் *
புரண்டு வீழ வாளை பாய் * குறுங்குடி நெடுந்தகாய் *
திரண்ட தோள் இரணியன் * சினங்கொள் ஆகம் ஒன்றையும் *
இரண்டு கூறு செய்துகந்த * சிங்கம் என்பது உன்னையே *



திருச்சந்தவிருத்தம் , 101  ஆம் பாசுரம் :-


இரந்துரைபதுண்டு வாழி * ஏம நீர் திறத்தமா *
வரம் திருக்குறிப்பில் * வைத்ததாகில் மன்னு சீர் *
பரந்த சிந்தை ஒன்றி நின்று * நின்ன பாத பங்கயம் *
நிரந்தரம் நினைப்பதாக * நீ நினைக்க வேண்டுமே *




திருப்பாணாழ்வார் :-

அமலனாதிபிரான் , எட்டாம் பாசுரம் :-

பரியனாகி வந்த * அவணன் உடல் கீண்ட * அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் * அரங்கத்து  அமலன் முகத்து *
கரியவாகிப் புடை பரந்து * மிளிர்ந்து செவ்வரியோடி * நீண்ட அப்
பெரியவாய கண்கள் * என்னைப் பேதைமை செய்தனவே *



இரண்டாம் ஆயிரம் :-


ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் :-


பெரிய திருமொழி :-


முதல் பத்து, இரண்டாம் திருமொழி, நான்காம் பாசுரம் :-


மறங்கொள் ஆளரி உருவென வெருவர * ஒருவனது அகல்மார்வம்
திறந்து * வானவர் மணிமுடி பணி தர * இருந்த நல் இமயத்து *
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக் * கிடந்தருகெரி  வீசும் *
பிறங்கு மாமணி அருவி ஒடிழிதரு * பிருதி சென்றடை நெஞ்சே *


முதல் பத்து, நான் காம் திருமொழி, எட்டாம் பாசுரம் :-


மான் முனிந்து ஒரு கால் வரிசிலை வளைத்த மன்னவன் *
பொன்னிறத்து உரவோன் *
ஊன் முனிந்து அவனது உடல் இருபிளவா *
உகிர் நுதி மடுத்து * அயன் அரனைத்
தான் முனிந்திட்ட * வெந்திறல் சாபம் தவிர்த்தவன் *
தவம் புரிந்து உயர்ந்த
மாமுனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் *
வதரியாசிராமத்துள்ளானே *



முதல் பத்து , ஐந்தாம் திருமொழி ,  ஏழாம் பாசுரம் :-


ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் * அரியாய்ப்பரிய இரணியனை *
ஊனார் அகலம் பிளவெடுத்த * ஒருவன் தானே இருசுடராய் *
வானாய்த் தீயாய் மாருதமாய் * மலையாய் அலைநீர் உலகனைத்தும் *
தானாய் * தானுமானான் தன் * சாளக்கிராமம் அடை நெஞ்சே *


முதல் பத்து, ஏழாம் திருமொழி, முதல் பாசுரம்  முதல் பத்தாம் பாசுரம் முடிய:-

அங்கண் ஞாலம் அஞ்ச * அங்கோர் ஆளரியாய் * அவுணன்
பொங்க ஆகம் வள்ளுகிரால் * போழ்ந்த புஈதனிடம் *
பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு * பத்திமையால் * அடிக் கீழ்ச்
செங்கணாளி இட்டிறைஞ்சும் * சிங்கவேள் குன்றமே *


அலைத்த பேழ் வாய் * வாள் எயிற்றொர் கோளரியாய் * அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த * கூருகிறாளனிடம் *
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் * வந்துடிவாய் கடுப்ப *
சிலைக் கை வேடர் தெழிப்பறாத * சிங்கவேள் குன்றமே *


ஏய்ந்த பேழ் வாய் * வாள் எயிற்றோர் கோளரியாய் * அவுணன்
வாய்ந்த ஆகம் வள்ளூகிறால் * வகிர்ந்த அம்மானதிடம் *
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் * அன்றியும் நின்றழலால் *
தேய்ந்த வேயும் அல்லதில்லாச்  *  சிங்கவேள் குன்றமே *


எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் * ஏதலன் இன்னுயிரை
வவ்வி * ஆகம் வள்ளூகிறால் * வகிர்ந்த அம்மானதிடம் *
கவ்வு நாயும் கழுகும் * உச்சிப் போதொடுகால் சுழன்று *
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் * சிங்கவேள் குன்றமே *


மென்ற பேழ்வாய் * வாள் எயிற்றோர் கோளரியாய் * அவணன்
பொன்ற ஆகம் வள்ளுகிறால் * போழ்ந்த புனிதனிடம் *
நின்ற செந்தீ மொண்டு சூறை * நீள் விசுபு ஊடிரிய  *
சென்று காண்டற்கரிய கோயில் * சிங்கவேள் குன்றமே *


எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் * எயிற்றொடு இது எவ்வுருவென்று *
இரிந்து வானோர் கலங்கி ஓட * இருந்த அம்மானதிடம் *
கனைத்த தீயும் கல்லும் அல்லா * வில்லுடை வேடருமாய் *
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் * சிவேள் குன்றமே *


முனைத்த சீற்றம் விண் சுடப் போய் * மூவுலகும் பிறவும் *
அனைத்தும் அஞ்ச ஆளரியாய் * இருந்த அம்மானதிடம் *
கனைத்த தீயும் கல்லும் அல்லா * வில்லுடை வேடருமாய் *
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் * சிங்கவேள் குன்றமே *



நாத்தழும்ப நான்முகனும் * ஈசனுமாய் முறையால்
ஏத்த * அங்கோர் ஆளரியாய் * இருந்த அம்மானதிடம் *
காய்த்த வாகை நெற்றொலிப்பக் * கல்லதர் வேய்ங்கழை போய் *
தேய்த்த தீயால் விண் சிவக்கும் * சிங்கவேள் குன்றமே *



நல்லை நெஞ்சே நாம் தொழுதும் * நம்முடை  நம்பெருமான் *
அல்லி மாதர் புல்க நின்ற * ஆயிரம்  தோளனிடம் *
நெலி மல்கிக் கல்லுடைப்பப் * புல்லிலை ஆர்த்து *   அதர்வாய்
சில்லு செல்லென்றொல்லறாத * சிங்காவேள் குன்றமே *



செங்கணாளி இட்டிறைஞ்சும் * சிங்கவேள் குன்றுடைய *
எங்கள் ஈசன் எம்பிரானை * இருந்தமிழ் நூற்புலவன் *
மங்கையாளன் மன்னு தொல் சீர் * வண்டறை தார்க் கலியன் *
செங்கையாளன் செஞ்சொல் மாலை * வல்லவர் தீதிலரே *







முதல் பத்து , பத்தாம் திருமொழி ,  ஐந்தாம் பாசுரம் :-


தூணாய் அதனூடு * அரியாய் வந்து தோன்றி *
பேணா அவுணன் உடலம் * பிளந்திட்டாய் *
சேணார் * திருவேங்கட மாமலை மேய *
கோணாகணையாய் * குறிக்கொள் எனை  நீயே *



இரண்டாம் பத்து, மூன்றாம் திருமொழி, எட்டாம் பாசுரம் :-

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் * வாயில் ஓராயிர நாமம் *
ஒள்ளீயவாகிப் போத ஆங்கு அதனுக்கு * ஒன்றுமோர் பொறுப்பிலனாகி *
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்பப் * பிறை எயிற்று அனல் விழிப் - பேழ் வாய் *
தெள்ளியசிங்கமாகிய தேவைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே *





இரண்டாம் பத்து , நான்காம் திருமொழி ,  ஏழாம் பாசுரம் :-


புகரார் உருவாகி முனிந்தவனைப் * புகழ் வீட முனிந்து உயிர் உண்டு *
அசுரன் -
நகராயின பாழ் பட நாமம் எறிந்து  அதுவன்றியும் * வென்ரிகொள் வாளவுணன் *
பகராதவன் ஆயிர நாமம் * அடி பணியாதவனைப் பணியால் அமரில் *
நிகராயவன் நெஞ்சிடந்தான் அவனுக்கு இடம் * மாமலையாவது நீர்மலையே*


இரண்டாம் பத்து, எட்டாம் திருமொழி,  முதல் பாசுரம் :-


திரிபுரம் மூன்று எரித்தானும் * மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப *
முரி திரை மாகடல் போல் முழங்கி * மூவுலகும் முறையால் வணங்க *
எரியன கேசர வாள் எயிற்றோடு * இரணியன் ஆகம் இரண்டு கூறா *
அரி உருவாம் இவரார் கொல் என்ன * அட்டபுயகரத்தேன் என்றாரே *


மூன்றாம் பத்து , முதல் திருமொழி ,  நான்காம் பாசுரம் :-


மாறு கொண்டு உடன்றெதிர்ந்த வல்லவுணன் தன் * மார்பகம் இரு பிளவா *
கூறு கொண்டு அவன் குல மகற்கு * இன்னருள்  கொடுத்தவனிடம் * மிடைந்து
சாறு கொண்ட மெங்கரும்பு இளங்கழை * தகை விசும்புற மணி நீழல் *
சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ் * திருவயிந்திரபுரமே *


மூன்றாம்  பத்து , மூன்றாம் டிருமொழி, எட்டாம் பாசுரம் :-

பொங்கி அமரில் ஒரு கால் * பொன் பெயரோனை வெருவ *
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு * ஆயிரந்தோள் எழுந்தாட *
பைங்கண் இரண்டு எரி கான்ற *  நீண்ட எயிற்றொடு பேழ் வாய் *
சிங்க உருவில்  வருவான் * சித்திரகூடத்து உள்ளானே *


மூன்றாம் பத்து, ஒன்பதாம் திருமொழி, முதல் பாசுரம் ;-


சலங்கொண்ட இரணியனது  அகல் மார்வம் கீண்டு *
தடங்கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை *
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி அம்மான் *
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் *
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி *
சண்பகங்கள் மண நாறும் வண்பொழிலின் ஊடே *
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் *
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே *



மூன்றாம் பத்து, ஒன்பதாம் திருமொழி, இரண்டாம் பாசுரம் ;-


திண்ணியதோர் அரி உருவாய்த் திசை அனைத்தும் நடுங்கத் *
தேவரொடு தானவர்கள் திசைப்ப * இரணியனை
நண்ணி அவன் மார்வகலத்து  உகிர் மடுத்த நாதன் *
நாள் தோறு மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் *
எண்ணில் மிகு பெருஞ்செல்வத்து எழில் விளங்கு மறையும் *
ஏழிசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் *
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் *
வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே *


நான்காம் பத்து, முதல் திருமொழி, எழாம் பாசுரம் :-


ஓடாத வாளரியின் * உருவாகி இரணியனை *
வாடாத வள்ளுகிரால் * பிளந்தளைந்த மாலதிடம் *
ஏடேறு பெருஞ்செல்வத்து * எழில் மறையோர் நாங்கை தன்னுள் *
சேடேறு பொழில் தழுவு * திருத்தேவனார் தொகையே *


நான்காம் பத்து, இரண்டாம் திருமொழி, ஏழாம் பாசுரம் :-


உளைய ஒண்திறல் பொன்பெயரோன் தனது 8 உரம் பிலந்து உதிரத்தை
அளையும் * வெஞ்சினத்து அரிபரி கீறிய * அப்பன் வந்துறை கோயில் *
இளைய மங்கையர் இணையடிச் சிலம்பினோடு * எழில் கொள் -
பந்தடிபோர் * கை
வளையின் இன்றொலி மல்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே *



நான்காம் பத்து , பத்தாம் திருமொழி, எட்டாம் பாசுரம் :-


முடி உடை அமரர்க்கு இடர் செயும் * அசுரர் தம் பெருமானை * அன்று அரியாய் -
மடி இடை வைத்து  மார்வை முன் கீண்ட * மாயனார் மன்னிய கோயில் *
படி இடை மாடத்து அடியிடைத் தூணில் * பதித்த பன் மணிகளின் ஒளியால்*
விடி பகல் இரவென்று அறிவரிதாய * திருவெள்ளியங்குடி அதுவே *



ஐந்தாம் பத்து, ஆறாம் திருமொழி , நான்காம் பாசுரம் :-


வளர்ந்தவனை தடங்கடலுள் * வலியுருவில் திரிசகடம் *
தளர்ந்து அதிர உதைத்தவனைத் *  தரியாது அன்று இரணியனைப்
பிளந்தவனை * பெருநிலம் ஈரடி  நீட்டிப் * பண்டு ஒரு நாள்
அளந்தவனை *  யான் கண்டது  * அணி நீர்த் தென்னரங்கத்தே *



ஐந்தாம் பத்து, ஏழாம் திருமொழி, ஐந்தாம் பாசுரம் :-

எங்ஙனே உய்வர் ? தானவர் நினைந்தால் * இரணியன் இலங்கு பூண் அகலம்*
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து * பொழி தரும் அருவி ஒத்திழிய *
வெங்கண் வாளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் * விண்ணுறக் கனல் -
விழித்து எழுந்தது *
அங்ஙனே ஒக்க அரி உருவானான் * அரங்கமா நகர் அமர்ந்தானே *



ஐந்தாம் பத்து , ஒன்பதாம் திருமொழி ,  ஐந்தாம் பாசுரம் :-


வக்கரன் வாய் முன் கீண்ட * மாயனே ! என்றுவானோர்
புக்கு * அரண் தந்து அருளாய் என்னப் * பொன் ஆகத்தானை *
நக்கரி உருவமாகி  * நகம் கிளர்ந்து  இடந்து உகந்த *
சக்கரச் செல்வன் தென்பேர்த் * தலைவன் தான் அடைந்து உய்ந்தேனே *



ஆறாம் பத்து, ஐந்தாம் திருமொழி, இரண்டாம் பாசுரம் :-


முனையார் சீயமாகி * அவுணன் முரண் மார்வம் *
புனை வாள் உகிரால் * போழ்பட ஈர்ந்த புனிதனூர் *
சினையார் தேமாஞ் * செந்தளிர் கோதிக்குயில் கூவும் *
நனையார் சோலை சூழ்ந்து * அழகாய நறையூரே *



ஆறாம் பத்து, ஆறாம் திருமொழி, நான்காம் பாசுரம் :-


பைங்கணாள் அரி உருவாய் வெருவ  நோக்கிப்  *
பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி *
அங்கை வாள் உகிர் நுதியால் அவனது  ஆகம் *
அங்குருதி பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்பீர் *
வெங்கண் மாகளிறு உந்தி வெண்ணியேற்ற *
விறல் மன்னர் திறல் அழிய வெம்மா உய்த்த *
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் *
திருநறையூர் மணியாடம் சேர்மின்களே *



ஆறாம் பத்து, ஆறாம் திருமொழி, ஐந்தாம் பாசுரம் :-



அன்று உலக மூன்றினையும் அளந்து  * வேறோர்
அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு  *
வென்று அவனை விண்ணுலகில் செல உய்த்தாற்கு *
விருந்தாவீர் ! மேலெழுந்து விலங்கல் பாய்ந்து *
பொன் சிதறி மணி கொணர்ந்து  கரை மேல் சிந்திப் *
புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் *
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த  *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே *



ஆறாம் பத்து , எட்டாம் திருமொழி , நான்காம் பாசுரம் :-


ஓடா அரியாய் * இரையனை ஊன் இடந்த *
சேடார் பொழில் சூழ் *  திருநீர்மலையானை *
வாடா மலர்த் துழாய் * மாலை முடியானை *
நாஆள் தோறும் நாடி * நறையூரில் கண்டேனே *



ஏழாம் பத்து, நான்காம் திருமொழி, ஐந்தாம் பாசுரம் :-


வந்திக்கும் மற்றவர்க்கும் * மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன் *
முந்திச் சென்று அரி உருவாய் இரணியனை * முரண் அழித்த முதல்வர்க்கல்லால் *
சந்தப்பூ மலர்ச் சோலைத் * தண் சேறை எம்பெருமான் தாளை * நாளும்
சிந்திப்பார்க்கு என் உள்ளம் * தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே *


ஏழாம் பத்து , ஆறாம் திருமொழி ,  முதல் பாசுரம் :-


சிங்கமதாய் அவுணன் * திறலாகம் முன் கீண்டு உகந்த *
சங்கம் இடத்தானை  * தழல் ஆழி வலத்தானை *
செங்கமலத்து அயன் அனையார் * தென்னழுந்தையில் மன்னி நின்ற *
அங்கமலக் கண்ணனை * அடியேன் கண்டு கொண்டேனே *


ஏழாம் பத்து ,  எட்டாம் திருமொழி , ஐந்தாம் பாசுரம் :-


சினமேவும் அடல் அரியின் உருவமாகித் *
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு *
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி *
மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின் *
இனமேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை *
யேய்வாய மரகதம் போல் கிலியின் இன் சொல் *
அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத்து *
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே *


எட்டாம் பத்து, எட்டாம் திருமொழி, நான்காம் பாசுரம் :-


உளைந்த அரியும் மானிடமும் * உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து *
விளைந்த சீற்றம் விண் வெதும்ப * வேற்றோன் அகலம் வெஞ்சமத்து *
பிளந்து வளைந்த உகிரானைப் * பெருந்தண் செந்நெற்குலை தடிந்து *
கள்ஞ்செய் புறவில் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே *


எட்டாம் பத்து, ஒன்பதாம் திருமொழி, நான்காம் பாசுரம் :-

மிக்கானை * மறையாய் விரிந்த விளக்கை * என்னுள்
புக்கானைப் * புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை *
தக்கானைக் * கடிகைத் தடங்குன்றின் மிசை இருந்த *
அக்காரக்கனியை * அடைந்து உய்ந்து போனேனே *


ஒன்பதாம் பத்து, நான்காம் திருமொழி, நான்காம் பாசுரம் :-


பரிய இரணியது ஆகம் * அணியுகிரால் *
அரி உருவாய் கீண்டான் * அருள் தந்தவா நமக்கு *
பொருதிரைகள் போந்துலவு * புல்லாணி கை தொழுதேன் *
அரிமலர்க் கண்  நீர் ததும்ப * அந்துகிலும் நில்லாவே *


பத்தாம் பத்து ,  ஆறாம் திருமொழி ,  நான்காம் பாசுரம் : -


தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் * தான்
சரனாய் முரணாயவனை * உகிரால்
பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த *
பெருமான் திருமால் விரிநீர் உலகை *
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை  *
மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறளாய் *
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளைவெண்ணெய்  உண்டு ஆப்புண்டிருந்தவனே *



பதினோறாம் பத்து, முதல் திருமொழி, ஐந்தாம் பாசுரம் :-


அங்கோர் ஆளரியாய் * அவுணனை *
பங்கமா * இரு கூறு செய்தவன் *
மங்குல் மாமதி * வாங்கவே கொலோ ? *
பொங்கு மாகடல் * புலம்புகின்றதே *


பதினோறாம் பத்து, ஏழாம் திருமொழி , நான்காம் பாசுரம் :-


கூடா இரணியனைக் * கூருகிரால் மார்விடந்த *
ஓடா அடலரியை * உம்பரார் கோமானை *
தொடார் நறுந்துழாய் *  மார்வனை ஆர்வத்தால் *
பாடாதார் பாட்டென்றும் * பாட்டல்ல கேட்டாமே *




மூன்றாம் ஆயிரம் :-


ஸ்ரீ.பொய்கை ஆழ்வார் :-


முதல் திருவந்தாதி :-

17 ஆம் பாசுரம் :-


அடியும் படிகடப்பத் *  தோள் திசை மேல் செல்ல *
முடியும் விசும்பு அளந்தது என்பர் * வடி உகிரால்
ஈர்ந்தான் * இரணியனது ஆகம் * இருஞ்சிறைப் புள்
ஊர்ந்தான் உலகளந்த நான்று *



36 ஆம் பாசுரம் :-


முரணை வலி  * தொலைதற்கு ஆமென்றே  * முன்னம்
தரணி தனதாகத் தானே * இரணியனைப்
புண் நிரந்த வள்ளுகிறால் * பொன்னாழிக் கையால் *  நீ
மண் இரந்து கொண்ட வகை *


90 வது பாசுரம் :-

வரத்தால் வலி நினைந்து * மாதவ நின் பாதம் *
சிரத்தால்  வணங்கானாம் என்றே * உரத்தினால்
ஈரரியாய் * நேர் வலியோனாய இரணியனை *
ஓரரியாய் நீ இடந்தது ஊன்*



ஸ்ரீ.பூதத்தாழ்வார் :-

இரண்டாம் திருவந்தாதி :-


வரங்கருதித் தன்னை * வணங்காத வன்மை *
உரம் கருதி மூர்க்கத்தவனை * நரம் கலந்த
சிங்கமாய் கீண்ட * திருவன் அடி இணையே *
அங்கண்மா ஞாலத்து அமுது *



ஸ்ரீ.பேயாழ்வார் :-

மூன்றாம் திருவந்தாதி :-


65 வது பாசுரம்:-


அங்கற்கிடரின்றி * அந்திப் பொழுதத்து *
மங்க இரணியனது ஆகத்தை * பொங்கி
அரி உருவமாய்ப் பிளந்த * அம்மானவனவே *
கரி உருவம் கொம்பொசித்தான் காய்ந்து *


95 வது பாசுரம் :-


புகுந்து இலங்கும் * அந்திப் பொழுதத்து * அரியாய்
இகழ்ந்த * இரணியனது ஆகம் * சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த  * திருமால் திருவடியே 8
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து *



ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் :-

நான்முகன் திருவந்தாதி - 21 ஆம் பாசுரம் :-

இவையா பிலவாய் * திறந்தெய் கான்ற *
இவையா எரி வட்டக் கண்கள் * இவையா
எரி பொங்கிக் காட்டும் * இமயோர் பெருமான் *
அரி பொங்கிக் காட்டும் அழகு *.



ஸ்ரீ.நம்மாழ்வார் :-


திருவிருத்தம் :-


மட நெஞ்சம் என்றும் தமது என்றும் * ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் * அப்பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விடப் * போய்த்
திட நெஞ்சமாய் * எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே  *



பெரிய திருவந்தாதி :-

35 ஆம் பாசுரம் :-


நின்றும் இருந்தும் * கிடந்தும் திரிதந்தும் *
ஒன்றுமோ ஆற்றான் என் நெஞ்சகலான் * அன்று அங்கை
வன்புடையால் பொன்பெயரோ * வாய் தகர்த்து மார்விடந்தான் *
அன்புடையன் அன்றே அவன் *


57 ஆம் பாசுரம் :-


வழித் தங்கு வல்வினையை * மாற்றானோ ? நெஞ்சே *
தழீஇக்கொண்டு  போர் அவுணன் தன்னை * சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் * புலால் வெள்ளம் தான் உகள *
வாழ்வடங்க மார்விடந்த  மால் *



ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார்  :-


சிறிய திருமடல் :-


போரார் நெடுவேலோன் பொன் பெயரோன் ஆகத்தை *
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு * குடல் மாலை
சீரார் திருமாபின் மேல் கட்டி * செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி *
ஆரா எழுந்தான் அரியுருவாய் *



பெரிய திருமடல் :-


ஆயிரக் கண் -
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் *
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை *
பின்னோர் அரி உருவமாகி எரி விழித்து *
கொல்நவிலும் வெஞ்சமத்து கொல்லாதே  * வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீர்த்து *
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி * அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த *





நான்காம் ஆயிரம் :-



ஸ்ரீ.நம்மாழ்வார் :-


திருவாய்மொழி  :-


இரண்டாம் பத்து , நான்காம் திருமொழி ,  முதல் பாசுரம் :-


ஆடியாடி அகம் கரைந்து  * இசை
பாடிப் பாடிக் * கண்ணீர் மல்கி * எங்கும்
நாடி நாடி * நரசிங்கா என்று *
வடி வாடும்  * இவ்வாணுதலே  *



இரண்டாம் பத்து , ஆறாம் திருமொழி  , ஆறாம் பாசுரம்  :-



உன்னைச் சிந்தை செய்து செய்து *  உன் நெடுமாமொழி இசை பாடியாடி * என் -
முன்னைத் தீவினைகள்  * முழுவேர் அரிந்தனன் யான்  *
உன்னைச் சிந்தையினால்  இகழ்ந்த  * இரணியன் அகல்மார்வம் கீண்ட * என்
முன்னைக் கோளரியே  * முடியாததென் எனக்கே ?



இரண்டாம் பத்து , எட்டாம் திருமொழி,  ஒன்பதாம் பாசுரம் :-


எங்கும் உளன் கண்ணன் என்ற * மகனைக் காய்ந்து *
இங்கு இலையால் என்று * இரணியன் தூண் புடைப்ப *
அங்கு அப்பொழுதே * அவன் வீயத் தோன்றிய  *  என்
சிங்கப் பிரான் பெருமை  * ஆராயும் சீர்மைத்தே *



மூன்றாம் பத்து , ஆறாம் திருமொழி  , ஆறாம்  பாசுரம் :-


தோற்றக் கேடவை  இல்லவன் உடையான்  * அவன் ஒரு மூர்த்தியாய்  *
சீற்றத்தோடு அருள் பெற்றவன் * அடிக் கீழ் புக நின்ற செங்கண்மால்  *
நாற்றாத் தோற்றச் சுவையொலி  * உறலாகி நின்ற  * எம் வானவர்
ஏற்றையே அன்றி  *  மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே  *



ஏழாம் பத்து  ,  ஆறாம் திருமொழி  , பதினொன்றாம் பாசுரம் :-


புக்க அரியுருவாய்  * அவுணன் உடல் கீண்டுகந்த  *
சக்கரச் செல்வன் தன்னைக் * குருகூர் சடகோபன் சொன்ன  *
மிக்க ஓராயிரத்துள்  * இவை பத்தும் வல்லார் அவரை  *
தொக்குப் பல்லாண்டிசைத்துக்  * கவரி செய்வர் ஏழையரே  *



ஒன்பதாம் பத்து , மூன்றாம் திருமொழி ,  ஏழாம் பாசுரம் :-


ஆகம் சேர்  * நரசிங்கம் அதாகி  * ஓர்
ஆகம் வள்ளுகிரால் *  பிளந்தானுறை  *
மாக வைகுந்தம்  * கான்பதற்கு  * என் மனம்
ஏகம் எண்ணும் * இராப் பகல் இன்றியே  *



ஒன்பதாம் பத்து ,  நான்காம் திருமொழி  , ஏழாம் பாசுரம் :-


உகந்தே உன்னை  * உள்ளும் என் உள்ளத்து  *   அகம்பால்
அகந்தான் அமர்ந்தே  * இடங்கொண்ட அமலா   *
மிகுந்தான் அவன் மார்வகலம்  * இரு கூறா
நகந்தாய்   * நரசிங்கமதாய உருவே  *



ஒன்பதாம் பத்து ,  பத்தாம் திருமொழி  , ஐந்தாம் பாசுரம்  :-


அன்பனாகும்  * தன தாள் அடைந்தார்க்கெல்லாம்  *
செம்பொன் ஆகத்து * அவுணன் உடல் கீண்டவன்  *
நன்பொன் ஏய்ந்த  மதிள் சூழ் *  திருக்கண்ணபுரத்து
அன்பன்  * நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே  *


பத்தாம் பத்து , ஆறாம் திருமொழி  , நான்காம் திருமொழி :-



என் நெஞ்சத்துள் இருந்து  * இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து  *
வன்னெஞ்சத்து இரணியனை  * மார்விடந்த வாட்டாற்றான்  *
மன்னஞ்சப் பாரதத்துப்  * பாண்டவர்க்காய்  படை தொட்டான்  *
நல் நெஞ்சே ! நம் பெருமான்  *  நமக்கருள் தான் செய்வானே  *


பத்தாம் பத்து , ஆறாம் திருமொழி  , பத்தாம்  பாசுரம்  :-


பிரியாது ஆட்செய் என்று  * பிறப்பறுத்து ஆளறக் கொண்டான்  *
அரியாகி இரணியனை * ஆகம் கீண்டான் அன்று  *
பெரியார்க்கு ஆட்பட்டக்கால்  *  பறாத பயன் பெறுமாறு  *
வரிவாள்வாய் அரவணை மேல்  * வாட்டாற்றாஅன் காட்டினனே  *