நேற்று ( 23.06.2015 0 அடியேன் மனைவியுடனும், அடியோங்கள் குடும்ப மாப்பிள்ளை திருவிடவெந்தை தீர்த்தகாரர் ஸ்ரீ.கோபி ஸ்வாமியுடனும், அடியேன் அகத்து எதிர் பகுதியில் குடியிருக்கும் ஆழ்வார் திருநகரி ஸ்ரீ.ராமாநுஜம் ஸ்வாமியுடனும் மற்றும் அவரவர் தம் குடும்பத்தினருடனும் திருவள்ளூர். ஸ்ரீ.வீரராகன் எம்பெருமானையும், ஸ்ரீ.கனகவல்லித் தாயாரையும் ஸேவிக்க திருவள்ளூர் சென்றிருந்தோம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் ஸ்ரீ.வீரராகவன் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோயிலில் சம்ப்ரோக்ஷாணம் நடைபெற்றது. சம்ப்ரோக்ஷணம் நடைபெற்ற போது அவ்வெம்பெருமானை ஸேவிக்க முடியாவிட்டாலும் ஒரு மண்டலத்திற்குள் ஸேவிப்பது மிகவும் விசேஷம் என்று பெரியோர்கள் கூறுவர். அதன்படி சம்ப்ரோக்ஷணம் நடைபெற்ற பொழுது திருவள்ளூர் செல்ல இயலவில்லை என்றபொழுதிலும் இரண்டு வாரங்களுக்குள்ளாகவாவது செல்ல முடிந்ததே என்ற மகிழ்ச்சியுடன் திருக்கோயிலுக்குச் சென்றோம்.
திருவிடவெந்தை தீர்த்தகாரருடன் சென்றது அடியோங்களுக்கு மிகவும் பாக்கியமாக அமைந்தது. ஆம். அங்கிருந்த திருக்கோயில் பட்டர்கள் அனைவரும் அவருக்கு மிகவும் தெரிந்தவர்கள் என்ற காரணத்தினால் ஸ்ரீ.வீரராகவன் தரிசனமும், ஸ்ரீ.கனகவல்லித் தாயார் தரிசனமும் மிகவும் அருமையாக கிடைக்கப்பெற்றோம். ஸ்ரீ.வீரராகவன் ஸன்னதியில் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக எம்பெருமானின் திருமுக மண்டலம் முதல் திருவடி வரை மிகவும் நிதானமாக கற்பூர ஹாரத்தியுடன் , அத்திருக்கோயிலின் ஸ்தல வரலாறுடன் பட்டர் எடுத்துக் கூற அடியோங்களுக்கு மிக ஆனந்தமான அனுபவமாக அந்த ஸேவை அமைந்தது. அது போலவே ஸ்ரீ. கனகவல்லித் தாயாரின் ஸேவையும்.
பிறகு திருக்கோயிலை வலம் வந்த போது , ஸ்ரீ.கண்ணன் ஸன்னதிக்கு பக்கத்தில் தற்பொழுது புதிய காட்சி வடிவத்துடன், ஸ்ரீ.சாலிஹோத்ர மஹரிஷிக்கு , எம்பெருமான் ஸ்ரீ.வீரராகவன் அருள்பாலித்து ஆட்கொண்டது அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடியோங்கள் படித்ததை வைத்துக் கொண்டு , ஒரு சிறிய கட்டுரையாக இங்கே பகிர்கின்றோம்.
ஸ்ரீ.சாலிஹோத்ர மஹரிஷியானவர் எம்பெருமான் ஸேவை வேண்டி திருவள்ளூரிலே தவம் இருக்கிறார். அச் சமயம் அவருக்கு அருள் பாலிக்க எண்ணம் கொண்ட எம்பெருமான், ஒரு மிகவும் வயதான மனிதராக வடிவம் கொண்டு, அவரை சந்திக்க வருகிறார். ஸ்ரீ.சாலிஹோத்ர மஹரிஷியிடம் தனக்கு மிகவும் பசிப்பதாகவும் , தனக்கு அன்னமிடவும் வேண்டுகிறார். ஒரு வயதான முதியவருக்கு அன்னம் இடுவதை மிகவும் பாக்கியமாகக் கருதிய மஹரிஷி, அவரை அமர வைத்து, இலையை இட்டு, அவருக்கு அமுது படைக்கிறார். மிகவும் விரும்பி அமுதுண்ட எம்பெருமான், தான் மிகவும் களைப்புற்றிருப்பதாகவும், அதனால் தான் சிறிது நேரம் படுத்துக் கொண்டு ஓய்வு எடுப்பதற்கு ஒரு சரியான் உள் "எவ்வுள் " எது என்று கேட்க , அந்த மஹரிஷியும், தன் குடிசையைக் காட்டி அந்த இடம்தாம் அவர் ஓய்வெடுக்க சரியான " உள் " என்று காட்ட , எம்பெருமானும் அங்கு சென்று ஸயனித்துக் கொள்கிறார். எம்பெருமானுக்கு சிறிது குளிரச் செய்யவே, அதனைக் கண்ட சாலிஹோத்ர மஹரிஷி, ஒரு போர்வையை எடுத்து அவருக்கு சாற்றிவிடுகிறார். எம்பெருமானும் கண் அயர்ந்து கொள்கிறார். சாலிஹோத்ர மஹரிஷியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
எம்பெருமான் கண் அயர்ந்த சிறிது நேரத்திலேயே தான் யார் என்பதை மஹரிஷிக்கு உணர்த்தவும், அவருக்கு அருள் பாலிக்கவும் எண்ணினார். அதன் காரணமாகத் தன் சுயரூபத்தை பள்ளிகொண்ட நிலையிலேயே , ஸ்ரீ.வீரராகவனாக மாறி, காட்சியளிக்கிறார். இதனைக் கண்ணுற்ற சாலிஹோத்ர மஹரிஷியும் தனக்கு எம்பெருமானின் அனுக்ரஹம் கிடைக்கப் பெற்றதை எண்ணி பேருவகை கொண்டதோடு, தனக்கு காட்சி அளித்த அதே நிலையிலேயே அங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் கொடுக்கும்படி வேண்டினார். ஸ்ரீ.வீரராகவனும் அவ்வாறே காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக மஹரிஷிக்கு வாக்களித்தார். இன்றும் நாம் ஸ்ரீ.வீரராகவன் ஸயன திருக்கோலத்தில் , அன்று சாலிஹோத்ர மஹரிஷி சாற்றிய போர்வையைப் போலவே ஒரு போர்வையை தன் மேல் சாற்றிக் கொண்டுதான் அடியார்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
திரு எவ்வுள் ஸ்ரீ.வீரராகவன் , வைத்திய வீரராகவன் என்னும் பெயருடனும் அழைக்கப்படுகிறார். இவரை நாடி வரும் பக்தர்களின் நோய் நொடிகளை தீர்த்து வைக்கிறார் இவ்வெம்பெருமான். இங்கு வரும் பக்தர்கள் தங்கள் நோய் தீர , வெல்லமும், உப்பும் கொண்டு வந்து , இங்குள்ள திருக்குளத்தில் கரைத்தால் , அவர்களின் நோய்களும் அவர்களை விட்டு கரைந்துவிடும் என்பது அதீத காலம் தொட்டு, பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருக் கோயிலில் குடி கொண்டிருக்கும் தாயார் ஸ்ரீ. கனகவல்லித் தாயார் வாத்சல்யத்தை வெரும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரது சரித்திரம் பி வருமாறு :-
ஒரு காலத்தில் தர்மசேனபுரம் என்ற ஒரு தேஸத்தை ஆண்ட அரசன் தர்மசேனட்உக்குமனின் மகளாக, வசுமதி என்ற திருநாமத்துடன் அவதரித்தார் இத்திருத்தலத் தாயார். ஸ்ரீ.வீரராகவன் மானுட ரூபம் கொண்டு , தர்மசேனனை அணுகி , அவள் மகளைத் தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டார். அப்பொழுது அங்கு வந்திருப்பது எம்பெருமான் என்பதை அறியாத தர்மசேனன், அவருக்கே தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டான். திருமணம் முடிந்த பிறகு , தான் ஸ்ரீ.வீரராகவனாக அங்கு எழுந்தருளியிருப்பதை அவர்களுக்கு உணர்த்த , அரசனும் மிக மகிழ்ச்சியுடன் , தன் மகளை அவருடன் அனுப்பி வைத்தான். பிறகு ஸ்ரீ.விரராகவன் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு வந்த தாயார் ஸ்ரீ.கனகவல்லித் தாயார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். கனகம் என்றால் ஸ்வர்ணம் , அதாகப்பட்டது தங்கமாகும். தங்கமாக இருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, மிகுந்த நேயத்துடன் ஸேவை ஸாதிக்கிறார் ஸ்ரீ.கனகவல்லித் தாயார்.
அடியோங்கள் குடும்பத்து குல தெய்வமான ஸ்ரீ.வீரராகவனும், ஸ்ரீ.கனகவல்லித் தாயாரையும் மீண்டும் ஸேவித்து விட்டு வந்தது அடியோங்களுக்கு மிகுந்த மன திருப்தியை கொடுப்பதுடன் , பக்தர்கள் எல்லோரும் திருவள்ளூர் சென்று பெருமாளையும் , தாயாரையும் ஸேவித்து , அவர்கள் அருளைப் பெரும்படி வேண்டிக்கொள்கிறோம்.
குறிப்பு :- அடியோங்கள் குடும்பத்து முன்னோர்களுக்கு காட்சி அளித்து, அடியோங்கள் குடும்பம் ஆலமரமாக தழைத்தோங்க அருள் பாலித்த சம்பவங்களை சென்ற ஆண்டு , " வீரராகவனும், விஜயராகவனும் " என்ற தலைப்பில் அடியேன் ஒரு சிறிய பதிவிட்டுள்ளேன். அதனை அன்பர்கள் அனைவரும் படிக்கும்படி விண்ணப்பிக்கின்றேன்.
மேலும் இங்கு பதிவிட்டுள்ள புகைப் படங்கள் முகநூலில் பதிவிட்டிருந்த சில அன்பர்களின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. முகம் தெரியாத அந்த அன்பர்களுக்கு அடியேனின் நன்றி.

No comments:
Post a Comment