திருக்கண்ணன்குடியும் திருமங்கை ஆழ்வாரும்.
திருக்கண்ணங்குடி திவ்ய தேஸம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாஸாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேஸமாகும். பெரிய திருமொழி ஒன்பதாம் பத்தின் முதல் திருமொழியாகிய " வங்கமா முந்நீர், வரி நிறப் பெரிய " என்று தொடங்கும் பாசுரத்துடன் மொத்தம் பத்து பாசுரங்கள். இங்கு ஸேவை ஸாதிக்கும் எம்பெருமான் திருநாமம் தாமோதர நாராயணன். தாயார் அரவிந்தவல்லி மற்றும் லோகநாயகி தாயார் என இரு திருநாமங்கள். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாளை " சாமமா மேனி என் தலைவன் " என்றும், " திருக்கண்ணங்குடியுள் நின்றானே " என்றும் ஆழ்வார் திருவாக்கால் அருளுகின்றார்.
திருக்கண்ணங்குடி திருத்தலத்தில், திருமங்கை ஆழ்வார் காலத்தில் நடந்த சில சம்பவங்கள் வெகு முக்கியமானவை. அவற்றுள் நான்கு விஷயங்கள் பிரசித்தம். அவை :-
1) உறங்காப் புளி
2) தோலா (தீரா) வழக்கு
3) ஊறாக் கிணறு.
4) காயா மகிழ்
இந்த நான்கு விஷயங்களுக்கும் காரணம் திருமங்கை ஆழ்வார் தான்.
அதனை பற்றி கீழே பார்ப்போம்.
ஸ்ரீ ரங்கத்தில் பெரிய பெருமாளுக்கு மதிள் கைங்கர்யம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் திருமங்கை ஆழ்வார். ஆனால் அவரால் அந்த கைங்கர்யத்தை முழுவதுமாக நிறைவேற்றக் கூடிய அளவில் பொருள் வசதியோ, பண வசதியோ அவரிடம் பற்றாக்குறையாக இருந்தது. ஆனால் எப்படியும் கைங்கர்யத்தை விரைவில் நிறைவேற்றிட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உறுதியாக இருந்தது. பணமும் , பொருளும் ஈட்டுவது பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தார். அதற்காக அவர் ஈடுபடும் காரியங்கள் - அது சரியோ , சரியில்லையோ எந்த நிலையையும் எடுத்தார். அவருக்கு வேண்டியது கைங்கர்யத்தை நிறைவேற்ற வேண்டிய பொருளும், பணமும்தான்.
1) உறங்காப் புளி :-
ஒரு சமயம் திருமங்கை ஆழ்வார் மனதிலே ஒரு எண்ணம் உதித்தது. அதாவது நாகப்பட்டினத்திலே, புத்தருக்கு ஒரு ஸ்வர்ண விக்ரஹம் இருந்தது. அது 200 / 300 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. அதனைக் எடுத்துக் கொண்டு வந்தால், நிச்சயமாக ஸ்ரீரங்கம் மதிள் கைங்கர்யத்தை பெருமளவுக்கு முடித்துவிடலாம் என்று எண்ணி, நாகப்பட்டினம்
சென்றார். அங்கிருந்து அந்த ஸ்வர்ண விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கி கிளம்பினார்.
பகலில் விலை மதிப்பு மிக்கதான ஸ்வர்ண புத்த விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு சென்றால் பலருக்கும் அந்த விஷயம் தெரிந்து விடும் என்பதால், இரவு நேரத்தில் மட்டும் அந்த விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு பயணப் படலாம் என்றும், அதற்காக எந்த இடத்தில் தங்குவது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயம் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணன்குடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது மாலை நேரம். எனவே விக்ரஹத்தை அங்கேயே பாதுகாப்பான ஒரு இடத்தில் புதைத்து வைக்கலாம் என முடிவெடுத்தார்.
திருமங்கை ஆழ்வாரின் எண்ணமானது அன்று இரவு , திருக்கண்ணன்குடியில் தங்கிவிட்டு, மறுநாள் காலைப் பொழுதையும் அங்கேயே கழித்துவிட்டு , அன்று இரவு அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று இருந்தது.
எனவே திருக்கண்ணன்குடியில் எந்த இடத்தில் புதைத்து வைக்கலாம் என்று அங்கு உள்ள பல இடங்களை பார்த்துக் கொண்டே வந்தார். அப்பொழுது அவர் கண்ணில் ஒரு வயல் வெளி தென்பட்டது. மனிதர்கள் நடமாட்டமில்லாத அந்த இடம்தான் சரியானது என்று அந்த வயலுக்குள் ஒரு இடத்தில் புத்த விக்ரஹத்தை புதைத்தார். அதனை அங்கு புதைத்து வைத்திருப்பதற்கு சாட்சியாக, அருகிலிருந்த ஒரு புளிய மரத்தை நோக்கி, அம் மரம் தான் , தான் அங்கு புதைத்து வைத்திருக்கும் விக்ரஹத்திற்கு சாட்சி என்றும், மேலும் தான் உறங்கும் நேரத்தில், அதனை காவல் காக்கவும் வேண்டினார். புளிய மரமும் சலசலத்து, தன் இலைகளை உதிர்த்து, அதன் வாயிலாக அவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பதாக ஒப்புக் கொண்டது. திருமங்கை ஆழ்வார் களைப்பின் காரணமாக உடனே உறங்கிவிடுகிறார். ஆழ்வார் உறக்கத்தில் இருக்கும் பொழுது, அந்த புளிய மரம் கண் கொட்டாமல் அவர் புதைத்து வைத்திருந்த ஸ்வர்ண விக்ரஹத்தை கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வந்தது.
இப்படி உறங்காமல் விழித்திருந்து, காவலாகவும், சாட்சியாகவும் இருந்த காரணத்தால் , அப் புளிய மரம் " உறங்காப் புளி " என்று அழைக்கப் பெற்றது. அம்மரத்தை திருக்கண்ணன்குடியில் தரிசிக்கலாம்.
2) தோலா ( தீரா ) வழக்கு :-
மறுநாள் காலை பொழுது விடிகிறது. அப்பொழுது அந்த வயலுக்குச் சொந்தக்காரனான ஒரு உழவன் அங்கு உழவு வேலை பார்ப்பதற்காக வருகிறான். இதனைக் கண்ட அந்த புளிய மரம், திருமங்கை ஆழ்வாரின் மீது தன் இலைகளை பொழியச் செய்து அவரை எழுப்பி விடுகிறது. உறக்கத்தில் இருந்து எழுந்த அவர், அங்கு வயலில் இறங்க இருந்த அந்த உழவனை தடுத்தார். உழவன் ஆழ்வாரிடம் அந்த வயல் தன்னுடையது என்றும் அங்கு உழவிட
வந்திருப்பதாகவும் சொல்ல, ஆழ்வாரோ அந்த வயல் தனக்குத் தான் சொந்தம் என்றும் எனவே அவ்வயலில் அவன் இறங்கக் கூடாது என்று சொல்லி தடுத்தார்.
உழவனோ, வயல் தனக்குச் சொந்தம் என்பதற்கு ஆதாரமாக தன்னிடம் வேண்டிய அளவு பத்திரங்கள் இருப்பதாகக் கூற, ஆனால் ஆழ்வாரோ வயல் தன்னுடையது என்று அவனிடம் வாதிட்டார்.
உழவன் எவ்வளவு சொல்லியும் அதனை ஆழ்வார் ஒப்புக்கொள்ளாமல் , அவனை வயலில் இறங்க அனுமதிக்கவில்லை. பிறகு உழவன் வேறு வழியின்றி, அவ்வூர் சபையாரிடம் சென்று தன் வயல் பற்றிய வழக்கை முறையிட்டான். அவர்களும் திருமங்கை ஆழ்வாரை அழைத்து அது பற்றி விசாரிக்க, அவரும் அந்த வயல் தனக்குத்தான் சொந்தமென்றும், அதற்குண்டான ஆவணங்கள், ஸ்ரீரங்கத்தில் இருப்பதாகவும் சொல்லி, அதனைக் கொண்டு வந்து காண்பிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
சபையினரும் அவர் வேண்டுகோளுக்கு ஒப்புக் கொண்டு, விரைவில் ஆவணங்களை கொண்டு வந்து காண்பிக்குமாறு ஆனையிட்டனர். அன்று இரவே ஆழ்வார், யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வயலில் புதைத்து வைத்திருந்த அந்த புத்த ஸ்வர்ண விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சென்றவர் சென்றவர்தான். பிறகு அங்கு திரும்பி வரவே இல்லை. அதனால் உழவன் முறையிட்ட வழக்கு இன்று வரை தீர்க்கப்படவே இல்லை.
இப்படியாக இதுவரை தீர்க்கபபடாமல் இருக்கும் இவ் வழக்கு "தீரா வழக்கான " கதையானது. அதன் காரணமாக திருக்கண்ணங்குடியில் நடக்கும் வழக்குகள் எதுவுமே தீர்க்கப்பட முடியாமல் இருப்பதாக வேடிக்கையாக பெரியோர் கூறுவர்.
3) ஊறாக் கிணறு :-
மேற்சொன்ன வழக்கு வாதம் நடந்து கொண்டிருக்கும் பொழுது திருமங்கை ஆழ்வாருக்கு தீர்த்த தாகம் எடுத்தது. அப்பொழுது அருகில் கிணற்றில் , நீர் எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் , தனக்கு தாகம் தீர்க்க, தண்ணீர் தருமாறு கேட்டார். அந்தப் பெண்ணோ, இவர் தனக்குச் சொந்தமில்லாத வயலையே தன்னுடையது என்று தர்க்கம் செய்தவர். இவருக்குத் தண்ணீர் கொடுத்தால் அந்த கிணறையும், குடத்தையும் தன்னுடையது என்று ஏன் சொல்ல மாட்டார் என்று பயந்து, அவருக்கு தண்ணீர் தர மறுத்தார். மிகுந்த தாகத்தில் இருந்த திருமங்கை ஆழ்வார், கோபம் கொண்டு,அவ்வூர் கிணறுகள் எதிலும் நல்ல தண்ணீர் ஊறாது என்று சாபமிட்டார். இதன் காரணமாக திருக்கண்ணங்குடியில், வீடுகளில் உள்ள கிணறுகளில் நல்ல தண்ணீர் ஊறுவதில்லை. அவ்வூர் மக்கள் திருக்கோயில் குளத்தில் இருந்து
தண்ணீர் எடுத்து உபயோகித்து வருகின்றனர். ஆனால் ஒரு ஆச்சரியம். கோயில் குளம், மற்றும்
கோயிலுக்குள் உள்ள கிணற்றில் மட்டும் தண்ணீர் ஊற்றெடுக்கும்.
இப்படியாக அவ்வூரில் உள்ள கிணறுகளுக்கு
" ஊறாக் கிணறு " என்று பெயர் நிலைத்துவிட்டது.
4) காயா மகிழ் :-
மிகுந்த தாகத்தில் இருந்த திருமங்கை ஆழ்வார் , களைப்புற்று, உணவு ஏதும் சாப்பிடாமல் அப்படியே அங்கிருந்த ஒரு மகிழ மரத்தின் அடியில் உறங்கிவிட்டார். திருமங்கை ஆழ்வார் மேல், பாசம் கொண்ட லோகநாயகித் தாயார், ஆழ்வார் உறக்கத்தில் இருக்கும் பொழுதே, அவருக்கு உணவு அளித்து அவர் பசியையும், களைப்பையும் போக்கினார். உணவை உட்கொண்ட பிறகு விழித்தெழுந்த ஆழ்வார் தனக்கு உணவளித்தது , தான் படுத்திருந்த மகிழ மரம்தான் என்று எண்ணி, அம்மரத்தை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.
பின்னர்தான் அவருக்குத் தெரிந்தது தனக்கு உணவளித்தது தாயார்தான் என்று. இதனால் மேலும் மகிழ்வுற்ற திருமங்கை ஆழ்வார் அம்மரத்தின் பூக்கள் என்றும் நல்ல மணம் தரும் பூக்களை உடையதாக இருக்கட்டும் என்று வாழ்த்தினார்.
அதன் காரணமாகத்தான் மகிழம் பூக்கள் வாடி விட்டாலும் அதன் மணத்தை இழப்பதில்லை.
மகிழ மரத்தின் பூக்களுக்கு " காயா மகிழ் " என்ற பெயர் நிலை பெற்றது.

![]() |
தாமோதர நாராயணப் பெருமாள் |
![]() |
அரவிந்த வல்லி, லோகநாயகித் தாயார். |
![]() |
குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கை ஆழ்வார். |

திருக்கண்ணங்குடி கோபுர தரிசனம் |
அருமையான தகவல். அடியேங்களுக்கு நன்றி.
ReplyDelete