நவ திருப்பதி எம்பெருமான்களின் ஒன்பது கருட ஸேவை ஆழ்வார் திருநகரியில். நாளை (30.05.2020) நடைபெற வேண்டிய இந்த ஒன்பது கருட ஸேவை இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
நவ திருப்பதிகள்
– ஸ்ரீ.வைகுண்டம், வரகுணமங்கை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி, திருப்புளிங்குடி, தென்திருப்பேரை,
பெருங்குளம், இரட்டைத்திருப்பதியாகிய ஸ்ரீ.தேவர் பிரான், ஸ்ரீ.அரவிந்தலோசனன் அவதார
ஸ்தலங்கள். இந்த நவதிருப்பதிகளும் நவக்ரஹ ஸ்தலங்களாக இருக்கின்றன.
அவை :-
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீ.வைகுண்டனாதன், ஸ்ரீ.வைகுண்டவல்லித் தாயார் மூலவர்களாகவும், ஸ்ரீ.கள்ளர்பிரான்,
ஸ்ரீ.சோரநாத நாயகித் தாயார் உற்சவர்களாக ஸேவை ஸாதிக்கும் இந்த திவ்ய தேஸம் சூரிய ஸ்தலமாக
உள்ளது.
நத்தம் என்னும்
வரகுணமங்கை திவ்யதேஸ எம்பெருமான் ஸ்ரீ.விஜயாசனப் பெருமாள் மூலவராகவும், ஸ்ரீ.எம்மிடர்கடிவான்
உற்சவராகவும், ஸ்ரீ,வரகுணவல்லி மற்றும் ஸ்ரீ.வரகுணமங்கை தாயார்கள் உற்சவர்களாகவும்
எழுந்தருளி ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம் சந்திர ஸ்தலமாக உள்ளது.
திருக்கோளூர் ஸ்ரீ.வைத்தமாநிதிப்
பெருமாள் மூலவர், உற்சவர் நிஷோபவித்தன், ஸ்ரீ.குமுதவல்லித் தாயார், ஸ்ரீ.கோளூர்வல்லி
தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம் செவ்வாய் ஸ்தலமாக உள்ளது.
திருப்புளிங்குடி
ஸ்ரீ.காய்சின வேந்தப் பெருமாளும், உற்சவர் ஸ்ரீ.எம்மிடர் களைவான், ஸ்ரீ.மலர்மகள் தாயார்,
நிலாமகள் தாயார், ஸ்ரீ.புளிங்குடி தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம் புதன் ஸ்தலமாக
உள்ளது.
ஆழ்வார்திருநகரி
என்று அழைக்கப்படும் திருக்குருகூரில் மூலவர்
ஸ்ரீ.ஆதிநாதப் பெருமாளும், உற்சவர் ஸ்ரீ.பொலிந்து நின்ற பிரானும், ஸ்ரீ.ஆதிநாதத் தாயாரும்,
ஸ்ரீ.திருக்குருகூர் தாயாரும் ஸேவை ஸாதிக்கும்
இத் திவ்ய தேஸம், குரு ஸ்தலமாக உள்ளது.
தென் திருப்பேரை
மூலவர் ஸ்ரீ.மகர நெடுங்குழைக்காதர், உற்சவர் ஸ்ரீ.நிகரில் முகில் வண்ணன் நேமியான்,
ஸ்ரீ.குழைக்காதுவல்லி தாயார், ஸ்ரீ.திருப்பேரை தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம்,
சுக்ரன் ஸ்தலமாக உள்ளது.
பெருங்குளமாகிய
திருக்குளந்தை மூலவர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசப் பெருமாள், உற்சவர் ஸ்ரீ.மாயக்கூத்தன், ஸ்ரீ.அலமேலுமங்கைத்
தாயார், ஸ்ரீ.குளந்தைவல்லித் தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம், சனி ஸ்தலமாக
உள்ளது.
இரட்டைத் திருப்பதியாகிய
தொலைவில்லிமங்கலத்தின் ஒரு திவ்யதேஸத்தில் மூலவர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசர், உற்சவர் ஸ்ரீ.தேவர்பிரான்
, ஸ்ரீ.அலமேலுமங்கைத் தாயார், ஸ்ரீ.பத்மாவதித் தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம்,
ராகு ஸ்தலமாக உள்ளது.
இரட்டைத் திருப்பதியாகிய
தொலைவில்லிமங்கலத்தின் இன்னுமொரு திவ்ய தேஸத்தில் மூலவர் ஸ்ரீ.அரவிந்தலோசனர், உற்சவர்
ஸ்ரீ.செந்தாமரைக் கண்ணன், ஸ்ரீ.கருந்தடங்கண்ணி தாயார் ஸேவை ஸாதிக்கும் இத் திவ்ய தேஸம்
கேது ஸ்தலமாக உள்ளது.
ஸ்ரீ.நம்மாழ்வாரின்
திருஅவதார திருநக்ஷத்திரமான வைகாசி விசாக நக்ஷத்திர உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று, தாமிரபரணி
நதிக்கரை பகுதிகளில் சில இடங்களில் உள்ள இந்த ஒன்பது திவ்ய தேஸ எம்பெருமான்களில் எட்டு
திவ்ய தேஸ எம்பெருமான்கள் , ஸ்ரீ.ஆதி நாதப் பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்தமும் , ஸ்ரீ.நம்மாழ்வார்
திருஅவதார ஸ்தலமுமான ஆழ்வார் திருநகரி திவ்ய தேஸத்திற்கு , ஸ்ரீ.நம்மாழ்வாரின் திரு
அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் காலையில் எழுந்தருளுவார்கள்.
அங்கு காலை எல்லா
எம்பெருமான்களுக்கும், ஸ்ரீ.நம்மாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடைபெரும். திருமஞ்சனம்
முடிந்த பின்னர் ஸ்ரீ.நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள திருவாய் மொழியின் ஐந்தாம் பத்து
ஸ்ரீ.நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் இடத்தில் அருளிச் செயல் கோஷ்டியாகும்.
ஆழ்வார் திருநகரியாகிய
திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வார்களின் தலைவனாகிய ஸ்ரீ.நம்மாழ்வார், ஒன்பது கருட ஸேவை
முடிந்த அடுத்த நாளான , ஆறாம் நாள் இந்த ஒனபது திவ்ய தேஸ எம்பெருமான் களுக்கும் திருக்கோயிலுக்கு
வெளியே மங்களாஸாஸனம் அருளுவார்.
இந்த ஒன்பது திவ்ய
தேஸங்களையும் ஸ்ரீ.நம்மாழ்வார் அவர் அருளிச் செய்த திருவாய்மொழியில் அருளிச் செய்துள்ளார்.
திருக்குருங்கூடி,
திருக்கோளூர், திருப்புளிங்குடி, தென் திருப்பேரை, தொலைவில்லிமங்கலம் திவ்ய தேஸங்களைப்
பற்றி முழுவதுமாக பதினோறு பாசுரங்களிலும், வைகுண்டம், வரகுணமங்கை மற்றும் திருக்குளந்தை
திவ்ய தேஸங்களை ஒன்று முதல் இரண்டு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.
அவை :-
திருக்குருங்குடியாகிய
ஆழ்வார் திருநகரி, (ஸ்ரீ.ஆதி நாதப் பெருமாள், ஸ்ரீ.பொலிந்து நின்ற பிரான் எம்பெருமான்கள்),
திவ்ய தேஸத்தை திருவாய்மொழியின் நான்காம் பத்தின், பத்தாம் திருமொழியின் “ ஒன்றும்
தேவும் உலகும் உயிரும் மற்றும்” என்று தொடங்கும் பதினோறு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.
திருக்கோளூர்
( ஸ்ரீ.வைத்தமாநிதி பெருமாள்) திவ்ய தேஸத்தை, திருவாய் மொழியின் ஆறாம் பத்தின் ஏழாம்
திருமொழியில் “உண்ணும் சோறு, பருகு நீர்” என்று
தொடங்கும் பதினோறு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.
திருப்புளிங்கூடி
(ஸ்ரீ.காய்சின வேந்தப் பெருமாள், ஸ்ரீ.எம்மிடர் கடிவான் பெருமாள் ) திவ்ய தேஸத்தை திருவாய்
மொழியின் ஒன்பதாம் பத்தின் இரண்டாம் திருமொழியின், “ பண்டை நாளாலே நின் திருவருளும்
“ என்று தொடங்கும் பதினோறு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.
தென்திருப்பேரை
( ஸ்ரீ.மகர நெடுங்குழைக்காதர், ஸ்ரீ.நிகரில் முகில் வண்ணன்) திவ்ய தேஸத்தை, திருவாய்
மொழியின் ஏழாம் பத்தின் மூன்றாம் திருமொழியின் “ வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி
“ என்று தொடங்கும் பதினோரு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.
தொலைவில்லிமங்கலம்
( ஸ்ரீ.ஸ்ரீனிவாசர், ஸ்ரீ.தேவபிரான், ஸ்ரீ.அரவிந்தலோசனர், ஸ்ரீ.செந்தாமரைக் கண்ணன்
) இரட்டை திவ்ய தேஸத்தையும் திருவாய்மொழியின் ஆறாம் பத்தின் ஐந்தாம் திருமொழியில்
“ துவளில் மாமணி மாடம் ஓங்கு “ என்று தொடங்கும் பதினோறு பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.
வரகுணமங்கை திவ்ய
தேஸத்தை ( ஸ்ரீ.விஜயாசன பெருமாள், ஸ்ரீ.எம்மிடர் கடிவான் பெருமாள் ) திருவாய்மொழியின்
ஒன்பதாம் பத்தின் இரண்டாம் திருமொழியின் நான்காம் பாசுரத்தில் “புளிங்குடிக் கிடந்து
வரகுணமங்கை இருந்து * வைகுந்தத்துள் நின்று “ என்ற பாசுரத்தி அருளிச் செய்துள்ளார்.
வைகுந்தம் திவ்ய
தேஸத்தை (ஸ்ரீ.வைகுண்டநாதன் , ஸ்ரீ.கள்ளர்பிரான்) , திருவாய்மொழியின் ஒன்பதாம் பத்தின்
இரண்டாம் திருமொழியின் நான் காம் பாசுரத்தில் “புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து
* வைகுந்தத்துள் நின்று “ என்ற பாசுரத்திலும் மற்றும் “எங்கள் கண் முகப்பே உலகர்கள்
எல்லாம்” என்ற எட்டாம் பாசுரத்தில் , “திருவைகுந்தத்துள்ளாய் தேவா “ என்று அருளிச்
செய்துள்ளார்.
பெருங்குளம் என்னும்
திருக்குளந்தை (ஸ்ரீ.ஸ்ரீனிவாசர், ஸ்ரீ.மாயக்கூத்தன் ) திவ்ய தேஸத்தை, திருவாய்மொழியின்
எட்டாம் பத்தின் இரண்டாம் திருமொழியின் நான் காம் பாசுரமான “ கூடச் சென்றேன் இனி என்
கொடுக்கேன் “ என்று தொடங்கும் பாசுரத்தில் “ மாடக் கொடி மதிள் தென்குளந்தை * வண் குடபால்
நின்ற மாயக் குத்தன் “ என்று உரைத்துள்ளார்.
பின் குறிப்பு
– கடந்த 2015 ஆம் ஆண்டு ஆழ்வார் திருநகரியில் ஒன்பது திவ்ய தேஸ எம்பெருமான்களுக்கு,
ஸ்ரீ.நம்மாழ்வார் திரு அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் அன்று காலை சிறிது நேரம் கழித்து
சென்றதால் சில எம்பெருமான் களின் திருமஞ்சனங்களை மட்டுமே ஸேவிக்க முடிந்தது. இரவு ஒன்பது
எம்பெருமான்களும் கருட வாஹனத்தில் எழுந்தருளி ஸேவை ஸாதித்ததை ஸேவிக்கும் பாக்கியம்
கிடைக்கப் பெற்றோம். அடுத்து ஆறாம் நாள் காலை ஒன்பது திவ்ய தேஸ எம்பெருமான்களுக்கும்
மங்களாஸாஸனம் அருளி, ஸ்ரீ.நம்மாழ்வாருடன் , எம்பெருமான் கள் பிரியா விடை பெற்றதையும்
ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்.
இன்று ஒன்பது கருட
வாஹன ஸேவைகளை பதிவிட்டு , திருமஞ்சனம் மற்றும் மங்களா ஸாஸனம், பிரியாவிடை புகைப்படங்களை
பின்னர் பதிவிடிகின்றேன்.
நவ திருப்பதி எம்பெருமான்கள்
மற்றும் ஸ்ரீ.நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
அருளி எம்பெருமான்களை பிரியா விடை கண்டருளுவார்
No comments:
Post a Comment